'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம். அவருடன் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். தமிழில் வரவேற்பை பெற்ற இந்த படம் தெலுங்கு பதிப்பில் 'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்' என்ற பெயரில் வெளியாகி அங்கும் வரவேற்பைப் பெற்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் ரீ-ரிலீஸானது. இந்த படத்திற்கு இப்போதும் வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் இருதினங்களில் மட்டும் சுமார் ரூ.2 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் மறுவெளியீட்டிற்கு கிடைத்த வரவேற்புக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்த அன்பு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை தருகிறது. படக்குழுவினர், ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள்(ரசிகர்கள்) என்னை பிரமிக்க வைக்கிறீர்கள்'' என குறிப்பிட்டு, தியேட்டரில் ரசிகர்களுக்கு இந்த படத்திற்கு கொடுத்த வரவேற்பு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.




