காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

சின்னத்திரையில் நடித்து பிரபலமான நடிகர் கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கிய அவருக்கு ‛லிப்ட், டாடா' படங்கள் வெற்றியை தந்தன. தற்போது இரண்டு படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இந்த மாதம் திருமணம் நடைபெற இருப்பதாக நேற்று செய்தி வெளியிட்டு இருந்தோம். இப்போது அதை கவின் தரப்பிலேயே அறிவித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமண கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. இடம் தெரிவிக்கப்படவில்லை. கவினின் சொந்த ஊரில் நடக்கலாம் என தெரிகிறது.
முன்னதாக 2019ல் நடைபெற்ற 'பிக் பாஸ் சீசன் 3' நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதில் மற்றுமொரு போட்டியாளராகக் கலந்து கொண்ட இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியாவைக் காதலிப்பதாக பரபரப்பு எழுந்தது. ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்த பின் இருவரும் அவரவர் சினிமாவில் பயணிக்க தொடங்கி விட்டனர்.




