கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் | தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் |

கடந்த 2008ம் ஆண்டில் சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் சுப்ரமணியபுரம். 1980கள் காலக்கட்டத்தை கண்முன் நிறுத்திய படம். காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் ஆகியவற்றை கூறிய இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரக்கனி, சுவாதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ‛‛கண்கள் இரண்டால்..., மதுர குலுங்க குலுங்க...'' ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்த படம் திரைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் தமிழகம் முழுக்க ரீ-ரிலீஸ் ஆக இருப்பதாக நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதில், ‛‛ஆகஸ்ட் 4ம் தேதி 2023 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கங்களில் சுப்ரமணியபுரம் மீண்டும் வெளியிடப்படும். அந்த அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பெறுங்கள்'' என அவர் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.