பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

மலையாள நடிகரான துல்கர் சல்மான், தந்தை மம்முட்டி உள்ளிட்ட மற்ற நடிகர்களை விடவும் பிற மொழிகளிலும், பான் இந்தியா படங்களிலும் அதிகம் நடிப்பவராக இருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'லக்கி பாஸ்கர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தப் படத்தின் கதையை 'ஒரு சாதாரண மனிதனின் நம்ப முடியாத உயரங்கள்' என்று அறிவித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.




