
துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கமா...
ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் "ஒரு மனம்" என்கிற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானபோது அந்த பாடல் குறித்த விபரங்களில் நடிகர்கள் பட்டியலில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயரும் இருந்தது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள "ஹிஸ் நேம் இஸ் ஜான்" என்கிற இரண்டாவது சிங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் பெயர் இடம் பெறவில்லை. இதை வைத்தே தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளித்தால் தான் உண்மை தெரியவரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!