Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி ரித்திகா சிங்

20 ஜூலை, 2023 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Police-officer-Ritika-Singh-discovers-the-Kolai

இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் கொலை. விடியுமுன் படத்தை இயக்கிய பாலாஜி குமார் இயக்கி உள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். நாளை (21ம் தேதி) படம் வெளிவருகிறது.

படத்தில் நடித்திருப்பது பற்றி ரித்திகா சிங் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகிறது. 'கொலை' படத்தில் எனக்கு புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள்.

கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும். அதே நேரத்தில், அவள் தனது மூத்த அதிகாரிகளுடன் அலுவல் ரீதியான தொல்லைக்கும் ஆளாகிறாள். இது அவளுடைய நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. அதையும் அவள் சமாளித்து எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் உள்ள திருப்பங்கள் பார்வையாளர்களின் யூகங்களை நிச்சயம் உடைக்கும். என்கிறார் ரித்திகா சிங்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரிலீஸ் குழப்பத்தால் தெலுங்கில் வரவேற்பு பெறாத 'மாமன்னன்'ரிலீஸ் குழப்பத்தால் தெலுங்கில் ... 'புராஜக்ட் கே' - பிரபாஸ் போஸ்டருக்குக் கடும் விமர்சனங்கள் 'புராஜக்ட் கே' - பிரபாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)