பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் | ‛மகாராஜா 2' கதை தயார் ; உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி |

லிப்ரா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். சமீபத்தில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை 2வதாக திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமிக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரின் வயது வித்தியாசம், உருவ வேற்றுமை காரணமாக சமூக வலைத்தளங்களில் வைரலானது இவர்கள் திருமணம்.
இந்த நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் மீது அமெரிக்கா வாழ் தமிழர் விஜய் என்பவர் ஆன்லைன் மூலம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதில் செயலி ஒன்றின் மூலம் ரவீந்தர் சந்திரசேகர் தனக்கு அறிமுகம் ஆனதாகவும், அந்த பழக்கத்தில் ரவீந்தர் சந்திரசேகர் படத் தயாரிப்பு செலவுக்கு கேட்ட 15 லட்சத்தை கடனாக கொடுத்ததாகவும், ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர் ஏமாற்றி வருவதாகவும், அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜய் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினார்கள். அதன்பேரில் ரவீந்தர் சந்திரசேகர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்னிலையில் ஆஜர் ஆனார். அவரிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்ட ரவீந்தர், அதை விரைவில் திருப்பி கொடுத்துவிடுவதாக கூறியதாக போலீஸ் தரபில் கூறப்படுகிறது.




