முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், சுனில் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஜெயிலர்'.
இப்படத்தின் முதல் சிங்கிளான 'காவாலா' பாடல் கடந்த வாரம் யு டியூபில் வெளியிடப்பட்டது. கடந்த வாரம் வெளியான இப்பாடல் 20 மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களுக்கும், மற்ற ரசிகர்களுக்கும் சண்டை நடந்து வருகிறது.
பலரும் இந்தப் பாடலை 'தமன்னா பாடல்' என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் அவர் முழுவதுமாக இடம் பெறும் பாடலை முதல் சிங்கிளாக வெளியிடாமல் அவர் சில வினாடிகள் மட்டுமே வரும் பாடலை வெளியிட்டது சரியா என்றும் சிலர் விமர்சித்துள்ளார்கள். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் சில வினாடிகள் வந்தாலும் அவருக்கேயுரிய ஸ்டைலில் அசத்தியுள்ளார் என்றும், இது தலைவர் பாட்டுதான் என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, இப்பாடல் 1958ல் எம்ஜிஆர், சரோஜா தேவி நடித்து வெளிவந்த 'நாடோடி மன்னன்' படத்தில் ஒரு காட்சியில் இடம் பெற்ற பின்னணி இசையிலிருந்து காப்பியடித்து உருவாக்கப்பட்டது என்றும் பலர் 'ட்ரோல்' செய்து வருகிறார்கள்.




