ராஷ்மிகா, கிரித்தி சனோன் படம் லெஸ்பியன் கதை இல்லை : இயக்குனர் விளக்கம் | ரவீணா டான்டன் தாயார் வீட்டில் 25 லட்சம் மதிப்பிலான நகைகள் திருட்டு | சல்மான்கான் அனுப்பிய லீகல் நோட்டீஸ் ; 'காலா ஹிரண்' இயக்குனர் பதிலடி | இளையராஜாவின் பத்து.... தமிழ் திரை இசையின் முத்து... | நடிகர் சங்க முழு நிர்வாகமும் பதவி விலக வேண்டும் - மாலா பார்வதி ஆவேசம் | நான் உயிருடன் தான் இருக்கிறேன் ; வீடியோ வெளியிட்ட மம்முட்டி பட நாயகி | தமிழ் நடிகைகளை புறக்கணிக்கிறாரா மாரி செல்வராஜ்? | 'மட்பிஷ்' படத்தின் மூலம் மலையாள படத்தில் அறிமுகமாகிறார் கெனிஷா | ஹிப்ஹாப் ஆதி தயாரித்த “பொருநை” ஆவணப்படம்: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு | 'மஞ்சணத்தி' படத்தில் இணைந்த பிரபலங்கள் |

“எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு” உள்ளிட்ட படங்களைத் தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் அடுத்து தயாரிக்க உள்ள படம் 'ஜீனி'.
இப்படத்தை மிஷ்கின் உதவியாளரான அர்ஜுனன் இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் 32வது படமாக உருவாகும் இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கிரித்தி ஷெட்டி, வாமிக்கா கபி ஆகிய மூவர் கதாநாயகிகளாக நடிக்க, தேவயானி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
கல்யாணி, கிரித்தி, வாமிக்கா மூவருமே ஜெயம் ரவியுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். கல்யாணி இதற்கு முன்பு தமிழில், “ஹீரோ, மாநாடு” ஆகிய படங்களிலும், கிரித்தி ஷெட்டி, “த வாரியர், கஸ்டடி” ஆகிய படங்களிலும், வாமிக்கா கபி 'மாலை நேரத்து மயக்கம்' படத்திலும் நடித்துள்ளார்கள்.
ஒரு ஹீரோவின் படத்தில் மூன்று ஹீரோயின்களா என இன்று நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், சிலர் ஜெயம் ரவியைப் பார்த்து பொறாமையும்பட்டார்கள். விழாவில் பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.




