திரிஷ்யம் 3 : முதல் நாள் வசூல் 50 கோடி | திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் | ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர் | கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3' |

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் கடைசியாகப் வெளிவந்த ஜெயில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து நடிகர் அர்ஜுன் தாஸை வைத்து அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார் வசந்த பாலன். துஷாரா விஜயன், காளி வெங்கட், வனிதா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் ஷங்கர் வழங்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் வருகின்ற ஜூலை 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை களத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. எப்பொழுதும் வசந்த பாலன் தனது படங்களில் சமூக பிரச்னைகளை மையப்படுத்தி கதைகளை உருவாக்குவார். அதேபோல் இந்த படத்திலும் ஜ. டி நிறுவனங்களில் திடீர் பணி நீக்கத்தால் இன்றைய தலைமுறை இளைஞர்கள் பாதிக்கப்படுவதை குறித்து இப்படம் பேசுகிறது. இந்த படத்தில் ஜ. டி பணியாளராக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




