பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணி இந்தியன் படத்தில் முதன்முதலாக இணைந்தனர். தற்போது மீண்டும் அவர்கள் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடைபெற்ற விபத்து, கொரோனா பாதிப்பு, வழக்கு உள்ளிட்ட சில சம்பவங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் ஏற்பட்ட சமரசத்திற்கு பின் கடந்த சில மாதங்களாக மீண்டும் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தியன்- 2 படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இந்த மாதத்தோடு மொத்த படப்பிடிப்பு முடிவடையப்போகிறதாம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும்போதே வெளிநாட்டில் கிராபிக்ஸ் பணிகளையும் தொடங்கி இருக்கும் இயக்குனர் ஷங்கர், இந்தியன்-2 படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.




