தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி | 'தாய்கிழவி' 22 கோடி.. 'வித் லவ்' 35 கோடி | பிளாஷ்பேக் : பாலுமகேந்திராவின் நிறைவேறாத சிவாஜி கனவு | பிளாஷ்பேக் : பாட வந்தவர் நடிகை ஆனார் | அமரனில் மிஸ் ஆச்சு... சேயோனில் அது நடக்குமா? | இயக்குனர் விஜய் என் வழிகாட்டி : ஜியா சங்கர் நெகிழ்ச்சி | நடிகை ஸ்ருதிகாவுக்கு வைரஸ் காய்ச்சல் | மறைந்த இயக்குனர் குடும்பத்துக்கு நிதி உதவி: மேடையிலே செக் கொடுத்தார் யோகி பாபு |

விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து இருந்த மேனேஜரை அவர் நீக்கிவிட்டதாக ஒரு செய்தி வந்து தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகாவிடம் அவர் 80 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ஆனால், இது குறித்து ராஷ்மிகா இதுவரை எந்த ஒரு புகாரையும் தெரிவிக்கவில்லை. அவரே இந்தப் பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. தன்னுடன் நீண்ட காலமாக இருந்தவர் என்பதால் ராஷ்மிகா இதைப் பெரிதாக்க விரும்பவில்லை என்றும் சொல்கிறார்கள்.
ராஷ்மிகா தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் 'ரெயின்போ' படத்திலும் நடித்து வருகிறார்.




