பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! | அட..டா... மதுரை சாப்பாடு: அமீனா ரபீக் ஆனந்தம் | விஸ்மாயா மோகன்லால் கதாநாயகியாக அறிமுகமாகும் தொடக்கம் படப்பிடிப்பு நிறைவு | என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில் | சிறை எனக்கு ஐந்தாம் வீடு போல ; ஜாமினில் விடுதலையான இயக்குனர் விக்ரம் பட் விளக்கம் | ‛கேஜிஎப்' இசையமைப்பாளருக்கு 35 லட்சம் மதிப்புள்ள கோல்டு வாட்ச் பரிசளித்த விஸ்வக் சென் | 'சரஸ்வதி' பட விழாவில் தெலுங்கு இயக்குனருக்கு நன்றி சொல்லி கண்ணீர் விட்ட வரலட்சுமி சரத்குமார் | தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது: இன்று மாலை ஓட்டு எண்ணிக்கை | எங்க வீட்டுப் பிள்ளை, ஆட்டோகிராப், மாமன் - ஞாயிறு திரைப்படங்கள் | கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி |

சண்டை இயக்குனர்கள் படம் இயக்குவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே கனல் கண்ணன், ஜாக்குவார் தங்கம், பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் படம் இயக்கி இருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அனல் அரசு. முன்னணி சண்டை இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய அனல் அரசு 2004ம் ஆண்டு 'அருள்' படத்தின் மூலம் சண்டை இயக்குனர் ஆனார். அதன்பிறகு 100க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றினார். சிங்ககுட்டி, ராஜபாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் உள்ளார். அடுத்து அவர் இயக்குனர் ஆகிறார். தற்போது படத்தின் பணிகளை துவங்கி உள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படமாக இது உருவாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வை தற்போது நடத்தி வருகிறார். வருகிற 16ம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் நடிகர், நடிகை தேர்வு நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.




