தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் |

கடந்த ஆண்டில் இயக்குனர் விமல் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சித்து, நடிகை நெகா ஷெட்டி இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் டிஜே டில்லு. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி திரைப்படமாக மாறியது.
இந்த நிலையில் நேற்று 'டிஜே டில்லு 2' பட ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் நடிகர் சித்து கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை அனுபாமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இயக்குனர் மாலிக் ராம் இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என்று ரொமான்டிக் போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.




