தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் | பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம் | பிளாஷ்பேக்: ஓட்டல் நடத்திய முதல் நடிகர் | 'தாய் கிழவி'யைப் பார்க்க பெண்கள் வருவார்களா? | பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன் | 'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : 'டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ? | 8 வார ஓடிடி இடைவெளி; தெலுங்கு திரையுலகம் ஆலோசனை | ‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' |

ஜுன் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பதால் அந்த மாதத்தில் குறைவான படங்கள் வெளிவருவதுதான் வழக்கம். ஆனால், இப்போது கிடைக்கும் இடைவெளியில் படங்களை வெளியிட்டாக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சிறிய படத் தயாரிப்பாளர்கள் ஆளாகிறார்கள். பெரிய படங்களுக்கும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கும்தான் தியேட்டர்கள் எளிதில் கிடைக்கின்றன. மற்ற படங்களுக்கு தியேட்டர்களைப் பெறுவது என்பது அவ்வளவு சாதாரணமாக நடக்கும் விஷயமல்ல.
கடந்த வாரம் ஜுன் 2ம் தேதி ஐந்து படங்கள் வெளியான நிலையில், இரண்டு படங்களுக்கு இடையேதான் முக்கிய போட்டி நிலவியது. இந்த வாரம் ஜுன் 9ம் தேதி வெளியாகும் படங்களிலும் இரண்டு படங்களுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் மற்றும் பலர் நடித்துள்ள 'போர் தொழில்', கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா மற்றும் பலர் நடித்துள்ள 'டக்கர்' ஆகிய படங்களுக்கு இடையில்தான் நேரடி போட்டி. இவற்றோடு வேறு சில படங்களும் வெளியாகலாம்.
மேலும், தெலுங்கில் தயாராகி தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் சமுத்திரக்கனி நடித்த 'விமானம்', ஆங்கிலத்தில் தயாராகி தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகும் 'டிரான்ஸ்பார்மர்ஸ் - ரைஸ் ஆப் த பீஸ்ட்ஸ்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.