ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | சல்மான்கான் உடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த அவரது வளர்ப்பு குதிரை | இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி |

கர்ணன் படத்திற்கு பின் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் ‛மாமன்னன்'. உதயநிதி, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன. அடுத்தமாதம் படம் வெளியாக உள்ளது. உதயநிதி அரசியலுக்கு சென்றுவிட்டதால் இதுவே அவரின் கடைசிப்படம் என அறிவித்துவிட்டார்.
ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' கடந்த 19-ம் தேதி வெளியானது. யுகபாரதி எழுதிய இந்த பாடலை வடிவேலு பாடினார். உணர்வுப்பூர்வமாக அமைந்த இந்தபாடல் யு-டியூப் தளத்தில் 58 லட்சத்திற்கு அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து இரண்டாவது பாடலாக 'ஜிகு ஜிகு ரயில்' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இதை ரஹ்மானே பாடி உள்ளார். தற்போது இந்தப்பாடல் வைரலாகி வருகிறது.




