தமிழக அரசு விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? | திருமண வீடியோ உரிமை : வேண்டாமென்று மறுத்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா? |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இதில் நாயகியாக ரித்து வர்மா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மினி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது இந்த படத்தை குறித்து விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தில் தனது சம்மந்தப்பட்ட காட்சியும் நடிகர் சுனில் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது என்று புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார். கூடுதலாக இப்படம் வருகின்ற ஜூலை 28 அன்று வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.