Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இராவண கோட்டம்' படத்திற்கு எதிர்ப்பு

09 மே, 2023 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Oppose-for-Ravana-kottam-movie

சாந்தனு பாக்யராஜ், ஆனந்தி நடித்துள்ள படம் 'இராவண கோட்டம்'. கண்ணன் ரவி தயாரித்துள்ளார், 'மதயானைக் கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கி உள்ளார். இந்த படம் ராமநாதபுரம் மாவட்டம் பகுதியில் உள்ள கருவேலங்காடு பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கிறது. வருகிற 12ம் தேதி வெளிவருகிறது.

இந்த படத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் பற்றி தவறான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகவும், அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தலைவர் முத்துரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் ஆகியோர் நேற்று முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: கண்ணன் ரவி தயாரிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் இராவணக் கோட்டம் என்ற திரைப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் சாதிய வன்மத்துடன் பல தவறான கருத்துகளை விக்ரம் சுகுமாரன் கூறினார். காமராஜர் ஆட்சியில்தான் பனை வெல்லம் காய்ச்ச விறகு தேவைப்பட்டதால் சீமைக்கருவேல மரங்களை அவர் கொண்டு வந்தார் என்றும் கீழ்த்தூவல் துப்பாக்கிச்சூட்டில் 5 அப்பாவி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதும் அவர் ஆட்சியில்தான் என்றும் கூறியிருக்கிறார்.

சீமைக்கருவேல மர விதைகள் 1876ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் விமானம் மூலம் தூவப்பட்டன. இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் இந்த மரம் உள்ளது. காமராஜர் மீது ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகள் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன. அதை உண்மை என்று நம்பி காமராஜர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இப்படத்தை எடுத்துள்ளனர். எனவே இராவணக் கோட்டம் படத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
2023 - வெளியீட்டு அறிவிப்பு ; வெளியான முக்கிய படங்கள்2023 - வெளியீட்டு அறிவிப்பு ; வெளியான ... மாடர்ன் லவ் சென்னை' தொடர்: 18ம் தேதி வெளியாகிறது மாடர்ன் லவ் சென்னை' தொடர்: 18ம் தேதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

s sambath kumar - chennai,இந்தியா
11 மே, 2023 - 12:26 Report Abuse
s sambath kumar காமராஜர் மாதிரி இன்னோர் முதல்வர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இன்னிக்கு தமிழ்நாடு தொழில் துறையில், கல்வியில்,விவசாயத்தில் முன்னேற்றம் அடைந்திருக்குன்னா அதுக்கு கர்மவீரர் காமராஜர் அய்யா மட்டுமே காரணம். பாலங்கள், அணைகள், பள்ளிகள், அனைத்தும் அவரால் மட்டுமே அதிகம் அமைக்கப் பட்டது.நான் பி ஜெ பி அனுதாபி.இருந்தாலும் எனக்கு காமராஜர் மீது மிகுந்த மரியாதை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in