42 வயதில் இப்படியொரு பிட்னஸா? ரகசியம் பகிரும் அபிராமி | எனக்கு பிடித்த படம் 'ரிதம்': அர்ஜூன் பேட்டி | ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல் | வடசென்னையின் வாழ்வியலை பேசும் ஆல்பாஸ் | 'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி | கமல்ஹாசனை தொடர்ந்து பிரைவேட் ஜெட்டை தவிர்க்கும் அல்லு அர்ஜுன் | தன்னை நிரூபிக்க விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும் ; சுரேஷ்கோபி ஆதரவு குரல் | 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பும் கிச்சா சுதீப் | எண்ட் கார்டு போட்டாலும் எழுந்திருக்காதீங்க ; 'காட்டாளன்' படக்குழு வேண்டுகோள் | தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ! |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல்பாகம் கடந்தாண்டு வெளியாகி வசூலை குவித்தது. இதன் இரண்டாம் பாகம் இன்று ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் நடைபெறாதது ஏமாற்றமே. 9 மணிக்கு மேல் தான் பெரும்பாலான தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது.
கடந்த 10 நாட்களாக படக்குழுவினர் சோழர்கள் பயணம் என்ற பெயரில் சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி, டில்லி என பல ஊர்களுக்கு சென்று புரொமோஷனில் ஈடுபட்டனர். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதையில் அதிக திருப்பங்கள் இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இப்படத்திற்கான முன்பதிவு கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்றோடு பள்ளிகளுக்கும் தேர்வுகள் முடிவடைகிறது. வார இறுதிநாள் வரை பெரும்பாலான தியேட்டர்களில் சிறப்பான முன்பதிவு நடைபெற்றுள்ளது. திங்கள்கிழமைம் மே 1 விடுமுறை தினம் என்பதால் இந்த நான்கு நாட்களிலேயே படம் குறிப்பிடத்தக்க அளவில் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தைப் பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் தவறாமல் பார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. முதல் பாகம் 500 கோடி வசூலைக் கடந்துள்ள நிலையில் இரண்டாம் பாகமும் அதே 500 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது.




