Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறிய மாற்றங்களுடன் கபாலி ரீ-ரிலீஸ் : தயாரிப்பாளர் தாணு தகவல்

25 ஏப், 2023 - 13:01 IST
எழுத்தின் அளவு:
Thanu-plans-for-Kabali-re-release-with-small-change

நடிகர் ரஜினிகாந்த் முதன்முறையாக கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற பைரவி படத்தின் விளம்பரங்களில் அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்தை முதலில் வழங்கியவர் தயாரிப்பாளர் தாணு.. ஆனால் அப்படிப்பட்டவரே ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்க கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் ஆனது. அந்தவகையில் கடந்த 2016ல் ரஜினிகாந்த்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி என்கிற படத்தை தயாரித்தார் தாணு.

ரஜினியின் திரையுலக பயணத்தில் அது ஒரு வித்தியாசமான படம் என்றாலும் அவரது வயதுக்கேற்ற கதையும் கதாபாத்திரமும் கூடவே ரஜினியும் அதை அனுபவித்து நடித்தார் என்றாலும் பெரும்பாலான ரஜினி ரசிகர்களுக்கு அந்த படம் முழு திருப்தியை அளிக்கவில்லை. இன்னும் கொஞ்சம் மாற்றம் இருந்திருக்கலாம், குறிப்பாக கிளைமாக்ஸ் வேறு மாதிரி இருந்திருக்கலாம் என்று படம் வெளியான பின் தங்களது கருத்தை தெரிவித்தார்கள். அதேசமயம் கபாலி படம் மிகப்பெரிய வெற்றி என்றும் இதுவரை இல்லாத அளவுக்கு ரஜினி படங்களில் அதிக வசூல் என்றும் தாணு அறிவித்தார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛கபாலி படத்தின் கிளைமாக்ஸில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் ஆனால் இயக்குனர் பா ரஞ்சித் விருப்பப்படியே விட்டு விடுங்கள் என ரஜினிகாந்த் கூறிவிட்டதால், அதற்குமேல் அதில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல எப்படி கமல்ஹாசன் நடித்து, தோல்வி படமாக அமைந்த ஆளவந்தான் படத்தை மீண்டும் தன் ரசனைக்கு ஏற்றபடி ரீ எடிட் செய்து டிஜிட்டல் முறையில் மாற்றி வெளியிடும் வேலைகளை செய்து வருகிறாரோ, அதேபோல கபாலி படத்தையும் கிளைமாக்ஸை மாற்றி படத்தையும் சற்றே ட்ரிம் செய்து மீண்டும் ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளார் கலைப்புலி தாணு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளியை விட்டுக்கொடுக்க விரும்பாத கார்த்திதீபாவளியை விட்டுக்கொடுக்க ... குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மோகன் ராஜாவின் மகன்! குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vinu - frankfurt,ஜெர்மனி
29 ஏப், 2023 - 17:04 Report Abuse
vinu கழுதையை ( கபாலியை ) குதிரை என்று ஒரு முறை ஏமாற்றி விற்றாய் என்று ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் உன்னை கிழித்து தொங்க விட்டான். மீண்டும் மக்களை ஏமாற்ற முடிவு எடுத்திருக்கியா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in