
மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய மனீஷாஜித்
ஜீசஸ் கிரேஸ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பாக, ஞான ஆரோக்கிய ராஜா, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, தயாரித்து, இயக்கியுள்ள படம் "உதிர்". இது கதையல்ல நிஜம் படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன் மற்றும் விதுஷ் நாயகர்களாக நடிக்கிறார்கள். மனோபாலா, சிங்கம்புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, ஓ.எஸ்.மணி, சிஸ்ஸர் மனோகர், போண்டா மணி ஆகியோர் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரமாக ஜி.வி.சன்மதி நடித்துள்ளார்.
படம் பற்றிய இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா கூறியதாவது: படிக்கும் போது வரும் காதல் சரியா, தவறா என்பதை மையமாகக் கொண்டு, படம் உருவாக்கப் பட்டுள்ளது. சிலையை பார்க்கும் கண்களுக்கு கடவுளாகவும், கற்சிலையாகவும் மாறுபட்டு தெரிகிறதோ, அதேபோல் காதலும் சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு என்று மாறுபட்டு தெரியும். பாடல்களுக்கு முக்கியத்தும் கொடுத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு இதுதான் உண்மையான காதல் என்று அடையாளம் காட்டும் படமாக இது இருக்கும். என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!