சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் | 2026ன் 3வது நேரடி ஓடிடி ரிலீஸ் 'லக்கி தி சூப்பர்ஸ்டார்' |

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் நினைவில் மீண்டும் கனவு கன்னியாக இடம்பிடித்தார் நடிகை ஷெரின். இருப்பினும் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் குக் வித் கோமாளியில் குக்காக நுழைந்துள்ளார். இப்போது வரை குக் வித் கோமாளியில் நன்றாக பெர்பார்மன்ஸ் செய்து எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அண்மையில் ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது ஒருவர் ஷெரினின் திருமணம் பற்றி கேட்க, 'ஜாதகத்தின் படி எனக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இன்ஸ்டா பில்டர் எனக்கு அடுத்த மாதத்தில் திருமணம் என்று சொல்லியிருக்கிறது. அதனால், நான் என்னுடைய திருமணத்தை ரொம்ப சீக்கிரமாகவே செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்' என கூறியுள்ளார்.
ஷெரினுக்கு சீக்கிரமே திருமணம் என்ற செய்தி ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




