Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரம்மி அறிவுப்பூர்வமான விளையாட்டு என நீதிமன்றம் கூறுகிறது : சரத்குமார்

13 ஏப், 2023 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Court-says-Rummy-is-intelligent-game-:--Sarathkumar

சென்னை : 'நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்' என சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை: ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்துதல் மசோதா கடந்த 24ம் தேதி சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, சட்டம் அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

முன்னதாக இச்சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு அமல்படுத்தியதில், தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் விளையாட்டுகளை காவல்துறையினர் பட்டியிலிட்டு வருகின்றனர்.

இதில் இந்திய அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பந்தயம், சூதாட்டம் விவகாரங்களில் மாநில அரசுக்கு இருக்கும் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டாலும், நீதிமன்றங்கள் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியை அறிவுப்பூர்வமான விளையாட்டு என பதிவு செய்துள்ளதை கவனத்தில் கொண்டு சட்டச்சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டும்.

மேலும், தமிழகத்தில் தடை என்ற போதிலும், பிற மாநிலங்களின் பெயர்களில் பதிவு செய்து ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சிந்தித்து இந்தியா முழுவதும் பந்தயம் வைத்து, பணம் செலுத்தி விளையாடும் அனைத்து வித ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களையும் தடை செய்வதற்கு மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'ருத்ரன்' வழக்கு, தயாரிப்பாளர் மேல் முறையீடு, இன்று விசாரணை'ருத்ரன்' வழக்கு, தயாரிப்பாளர் ... "ஓ போடு" - விக்ரம் போட்ட பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி "ஓ போடு" - விக்ரம் போட்ட பதிவால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

A. Ilangovan - Bangalore,இந்தியா
13 ஏப், 2023 - 20:06 Report Abuse
A. Ilangovan ரம்மி அறிவு பூர்வமான விளையாட்டு தான் பணம் கட்டி விளையாடாதவரை பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்களே 😭
Rate this:
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
13 ஏப், 2023 - 12:26 Report Abuse
M S RAGHUNATHAN நாட்டாமை கிளம்பிட்டார். இன்று எத்தனை தலைகள் உருளப் போகிறதோ தெரியாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in