என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் | சூர்யா தெலுங்கில் நடிக்கும் படம் பிரித்விராஜ் படத்தின் தழுவலா ? | சூரி படத்தில் காமெடியனாக நடிக்க வேண்டும் : யோகி பாபு விருப்பம் | அல்லு அர்ஜுன் படத்திற்கு அனிருத் சம்பளம் எவ்வளவு தெரியுமா... | 15வது திருமணநாள் : மனைவிக்கு காஸ்ட்லி கார் பரிசளித்த அல்லு அர்ஜுன் |

கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். கூடுதலாக சிலர் நடிக்கிறார்கள். அவர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வர இருக்கிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளையொட்டி சில நாட்களுக்கு முன்பு புஷ்பா இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதில் 'புஷ்பா எங்கே' என்கிற கான்செப்ட்டில் உருவான இந்த வீடியோ பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் முன்னோட்டம் வெளியானது. இந்த முன்னோட்ட உருவாக்கம் மற்றும் வெளியீட்டுக்கு மட்டும் 4 கோடி ரூபாய் தயாரிப்பு நிறுவனம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவீஸ் நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாய் தயாரித்து வருகிறது.