பேரன், பேத்திக்கு ஆன்மிக பெயர் சூட்டி மகிழ்ந்த சிரஞ்சீவி | 'பொன்னியின் செல்வன்' பாடல் வழக்கு: ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு | செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சதீஷ்குமார் விடுதலை | 'நான் ருத்ரன்' படத்தில் நடிக்க மறுப்பு : 20 கோடி நஷ்டஈடு கேட்டு தனுசுக்கு நோட்டீஸ் | ஜெயிலர் 2 படத்தை ஜூன் மாதத்திலேயே வெளியிட திட்டம் | அமீர்கான் மகனுக்கு ஜோடியான தமன்னா | ரூ. 40க்கு தனது சாப்பாடு தரும் அர்ஜித் சிங் | தயாரிப்பு நிறுவனம் துவங்கும் ரியோ ராஜ் | பிரீயட், பேண்டஸி படமாக 'தனுஷ் 56' : மாரி செல்வராஜ் தகவல் | எஜமான் பட காட்சியை போன்றே விஜய்க்கு வைத்தேன் : பரதன் |

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ரஜினி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டும் தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட வேண்டி உள்ளது. அடுத்தபடியாக தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார். இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் சென்னை மற்றும் மும்பையில் படமாக்கப்பட உள்ளது. அதன்பிறகு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 170 வது படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. அதோடு லால் சலாம் படத்தில் நடித்து வரும்போதே தனது 170 வது படத்திலும் நடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்த இரண்டு படங்களிலும் நடித்து முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 171வது படத்தில் நடிக்கிறார்.