விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் | எக்கோ பட இயக்குனருக்கு இறால் பிரியாணி விருந்தளித்த பிரபாஸ் | அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு நன்றி சொன்ன மோகன்லால் மகள் | கணவர் டைரக்ஷனில் சல்மான் கானுக்கு ஜோடியாகும் சமந்தா |

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படம் லால் சலாம். 3, வை ராஜா வை படங்களுக்கு பிறகு அவர் இயக்கும் படம் இது. இதில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஹீரோக்களாக நடிக்கின்றனர். முன்னாள் ஹீரோயின் ஜீவிதா, ரஜினியின் தங்கையாக நடிக்கிறார். செந்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது.
தற்போது இதன் படப்பிடிப்பு செஞ்சி மற்றும் அத்தியூர், சத்தியமங்கலம் அருகே உள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. விஷ்ணு விஷால் மற்றும் செந்தில் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. பொதுவாக படப்பிடிப்புகளுக்கு உள்ளூர் போலீசின் பாதுகாப்பு கேட்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புடன் தான் நடைபெறும். ஆனால் லால் சலாம் படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் இருந்து அழைத்து செல்லப்பட்டுள்ள பவுன்சர்களின் பாதுகாப்பில் நடந்து வருகிறது. ரஜினி நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட இருக்கிறது.




