பிரதமர் மோடியுடன் சந்திப்பு குறித்து ராஷ்மிகா நெகிழ்ச்சி | ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' : ஆரம்பமானதன் வரலாறு… | அதிக லைக்குகள் பெற்ற ராஷ்மிகா திருமணப் பதிவு | தென்னிந்திய இயக்குனரை தேடும் ஹிருத்திக் ரோஷன் | ரோஸ்லின் வெப் சீரிஸுக்காக எடையை குறைத்த மீனா | கேரள அரசு பஸ் புரமோஷனுக்காக 100வது படத்திற்கு முன்பே மோகன்லாலை இயக்கிய பிரியதர்ஷன் | சம்பளத்தை உயர்த்தினாரா ருக்மணி வசந்த்? | டாக்சிக் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமம் விற்பனை | ஜியோ படத்தில் நாயகியாக இவானா | ஸ்பிரிட் படத்தில் வில்லன் ஆக விவேக் ஓபராய் |

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் விடுதலை .வரும் 31ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடமே ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் வெற்றிமாறனின் உதவி இயக்குனரும், டாணக்காரன் இயக்குனரும், நடிகருமான தமிழ் அளித்த ஒரு பேட்டியில் கலந்துக் கொண்டு விடுதலை படத்தில் தனது அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போத நிகழ்ச்சியின் தொகுப்பாளர், ‛‛விஜய் மற்றும் கமல்ஹாசன் படத்தை இயக்க வெற்றிமாறனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது?'' என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறிய பதில், "விஜய் அண்ணா கூட படம் உறுதி தான். விஜய்க்கு ஒன்லைன் ஸ்டோரி சொல்லி அவரும் ஓகே சொல்லியுள்ளார். ஆனால் கமல் சார் கூட என்ன நிலவரம் என்று தெரியவில்லை” என தமிழ் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.