ஏப்., 30க்கு தள்ளிப்போனது ‛பெத்தி' | படம் வெளியாகும் முன்பே பாராட்டிய ரஜினிகாந்த்: ஏன் தெரியுமா? | பிப்ரவரி தொடங்கிவிட்டது: அஜித் பட அறிவிப்பு எப்போது? | 'அரசன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி? | தர்பார் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 விலும் இடம்பெற்ற ஜதின் ஷர்மா | வழக்கமான ராணுவ படம் அல்ல : மோகன்லால் 367வது பட இயக்குனர் தகவல் | தம்பியின் திருமணத்திற்கு முந்திய போட்டோஷூட்டில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன்! | 'வாரணாசி' படம் புராணம், தெய்வீகம் கலந்த கலவையாக இருக்கும்! -இயக்குனர் ராஜமவுலி தகவல் | சரத்குமார் நடிக்கும் 'ஆழி' படம் பிப்ரவரி 27ல் ரிலீஸ்! | ராஜமவுலியிடம் பிரியங்கா சோப்ரா வைத்த முக்கியமான கோரிக்கை |

'திருடன் போலீஸ்' படத்தை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்கத்தில் ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ், ராஜ் சேகர் வர்மா தயாரிப்பில், ரெஜினா கசாண்ட்ரா நடித்த 'சூர்ப்பனகை' படத்தை எஸ்பி சினிமாஸ் வாங்கியுள்ளது. பேண்டசி - த்ரில்லர் கதைக்களத்தைக் கொண்ட 'சூர்ப்பனகை' 1920கள் மற்றும் தற்போதைய காலம் என இரண்டு வெவ்வேறு காலகட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதையாகும். இதில் ரெஜினாவுடன் அக்ஷரா கவுடா, ஜேபி, மன்சூர் அலி கான், ஜீவா ரவி, மைக்கேல், கௌஷிக், யோகி, ரவிராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாம் சிஎஸ் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாக இருக்கிறது. இதில் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடிக்கிறார் அவர் ஒரு ஆராய்ச்சிக்காக செல்லும்போது சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொள்ள அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.