Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன் : அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி

20 பிப், 2023 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Rajini-pay-respects-to-Mayilsamy

சென்னை: நடிகர் மயில்சாமி மறைவு இந்த சமூகத்திற்கு பெரும் இழப்பு, அவரின் ஆசையை நான் நிறைவேற்றுவேன் என அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலியும் தெரிவித்தனர்.

இன்று(பிப்., 20) காலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; ‛‛மயில்சாமியை எனக்கு இளம் வயதிலேயே தெரியும், அவர் எனது நீண்டகால நண்பரும்கூட . அவர் எம்ஜிஆர் ரசிகர், சிவபக்தர். என்னை சந்திக்கும் போது அவர் அடிக்கடி இருவரை பற்றிதான்பேசுவார். அவருடன் அதிக படங்களை நடிக்க முடியவில்லை. வாய்ப்பு இல்லாமல் போனது. அவர் அடிக்கடி திருவண்ணாமலைக்கு செல்வார். அங்கிருந்தபடியே என்னிடம் போனில் பேசுவார்.



சில நாட்களுக்கு முன்பு 3 முறை தொடர்பு கொண்டார். ஆனால் என்னால் போனை அட்டண்ட் பண்ண முடியவில்லை. பேச முடியலன்னு சாரி கேட்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன், திரைப்பட உலகில் விவேக், மயில்சாமி ஆகிய இருவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கு இழப்பு. இருவரும் சிந்தனைவாதிகள், சமூக அக்கறைவாதிகள். நான் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய அவர் ஆசைப்பட்டதாக கூறினார். நிச்சயம் ஆசையை நிறைவேற்றுவேன்.

மயில்சாமியின் இறப்பு தற்செயலாக நடக்கவில்லை. ‛இது அவனுடைய கணக்கு'. சிவன் அவருடைய சிறந்த பக்தரை கூட்டிட்டு போயிட்டார். இவரது வாரிசுகள் எதிர்காலத்தில் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினி கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சகோதரர் 80வது பிறந்தநாள் விழா: தங்க மழை பொழிந்த ரஜினிசகோதரர் 80வது பிறந்தநாள் விழா: தங்க ... தெலுங்கில் 'வாகை' சூடிய தனுஷ் தெலுங்கில் 'வாகை' சூடிய தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nachiar - toronto,கனடா
20 பிப், 2023 - 18:46 Report Abuse
Nachiar தமிழர் கலாச்சாரம் பண்பாடு என்று வாய் கிழிய கூவும் நபர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஆடைப் பண்பாடு ஆசாரம் ஆங்கிலத்தில் etiquette என்று ஓன்று இன்று தமிழகத்தில் வழக்கொழிந்து வருகிறது. துக்க வீட்டுக்கு செல்கிறார்கள் தெருக்கோடியில் உள்ள கடையில் சுண்டல் வாங்க செல்வதுபோல் உடை அணிந்து. போனவர்க்கும் மரியாதை இல்லை போனவர் குடும்பத்துக்கும் மரியாதை இல்லை துக்கம் விசாரிக்கப் போகிறவர்களுக்கும் மரியாதை இல்லை. ஜீன் டி ஷர்ட் எல்லாத்துக்கும் ஒரு இடம் உண்டு அனால் துக்க வீட்டுக்கோ கல்யாண வீட்டுக்கோ ஒரு நேர்முக பேட்டிக்கோ இவை உகந்ததல்ல. கொஞ்சம் வடக்கில் இதர கலாச்சாரங்களை தலை திருப்பிப் பாருங்கள். துக்கம் விசாரிக்க மறைத்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த எப்படி ஆடை அணிந்து போகிறார்கள் என்பதை. கட்டாயம் திருத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. கருப்பு நிறம் அணிந்து துக்க வீட்டுக்கு போவது இந்து கலாச்சாரம் இல்லை. அது ஐரோப்பிய கலாச்சாரம். நமக்கு வெள்ளை தான். வெள்ளை அணிய விருப்பம் இல்லாத பெண்கள் கடுமையான நிறத்தை தவிர்த்து கொள்ளலாம். இதே போன்று தொப்பி அணிவதட்கும் இடம் உண்டு. ஆடை என்பது அணிபவர் தங்களுக்குக் கொடுக்கும் சுயமரியாதை மட்டுமல்ல யாரைப் பார்க்கப் போகிறீர்கலோ அவர்களுக்குக் கொடுக்கும் மரியாதை கூட. தெரிந்து செய்யுங்கள். அநாகரீகங்கள் நாகரீகங்கள் ஆகாது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in