Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரிலீசுக்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி

14 பிப், 2023 - 05:19 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh's-Soppana-Sundari-is-getting-ready-for-release!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் என்ற மூன்று படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்த நிலையில், அடுத்தபடியாக லாக்கப் படத்தை இயக்கிய சார்லஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சொப்பன சுந்தரி படம் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த சொப்பன சுந்தரி படம் திரில்லர் மற்றும் காமெடி கலந்த கதையில் உருவாகி இருக்கிறது.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் லட்சுமி பிரியா, சந்திர மவுலி, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இது தவிர மோகன்தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க, பர்ஹானா என பல படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் காதலர் தினப் பதிவுஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் காதலர் ... சுதா இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய்? சுதா இயக்கத்தில் விஜய் மகன் சஞ்சய்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)