Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருச்சிற்றம்பலம் இயக்குனருடன் கைகோர்த்த மாதவன்

12 பிப், 2023 - 02:48 IST
எழுத்தின் அளவு:
Mithran-R-Jawahar-Join-Actor-Madhavan-for-their-next

'யாரடி நீ மோகினி' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர், சமீபத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோரை வைத்து ‛திருச்சிற்றம்பலம்' படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தனது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை மித்ரன் ஜவஹர் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‛திருச்சிற்றம்பலம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, எனது அடுத்தப்படம் திறமையான மற்றும் எனக்கு பிடித்தமான நடிகர் மாதவனுடன். பிரபலமான மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது' எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் மாதவன் - மித்ரன் ஜவஹர் புதிய கூட்டணியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனதை திறந்தால் கதைகள் வரும்: 'கில்லி 'அம்மா ஜானகி சபேஷ் பேட்டிமனதை திறந்தால் கதைகள் வரும்: ... ஆனந்த் மகிந்திராவுக்கு ‛நாட்டு நாட்டு' ஸ்டெப் கற்றுக்கொடுத்த ராம்சரண் ஆனந்த் மகிந்திராவுக்கு ‛நாட்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)