Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது

07 பிப், 2023 - 18:12 IST
எழுத்தின் அளவு:
Dhruva-Natchathiram-soon-to-be-release

பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. இதுஒருபுறம் இருக்க கவுதம் மேனனின் இயக்கத்தில் அவர் நடித்த படம் ‛துருவ நட்சத்திரம்'. பல்வேறு பிரச்னைகளால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டு, தடைப்பட்டு நடந்து வந்தது.

விக்ரமுடன் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், விநாயகன், ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகளை மீண்டும் படமாக்கி இருக்கிறார் கவுதம் மேனன். இதோடு இப்படத்தின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஓரிரு பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே எஞ்சி உள்ளதாகவும், அதுவும் விரைவில் முடிந்துவிடும் என்கிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதால், தற்போது படமாக்கப்பட்ட காட்சிகளின் இறுதிகட்ட பணிகளும் நடத்தப்பட்டு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் நீண்டநாள் கிடப்பில் இருந்த துருவ நட்சத்திரம் திரையில் விரைவில் மின்னப் போகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம்வைரலாகும் விக்ரம் படத்தின் ... 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
07 பிப், 2023 - 20:11 Report Abuse
KayD சூட இருக்கும் போது சாப்பாடு சுவையா இருக்கும்.. PS1 பேரை வச்சி இதை ஓட பிளான் பண்ணிட்டாங்க... துருவ நட்சத்திரம் மின்ன போவது கஷ்ட்டம் . நேத்து வந்த வாரிசு துணிவு இப்போ பழைய படங்கள் ஆகி விட்ட நேரத்தில். பாப்போம் வாசு என்ன பண்ண போறார் என்று
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in