47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! |

'துணிவு' படத்திற்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரது 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்த வருடம் மார்ச் மாதம் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், கடந்த ஓரிரு வாரங்களாகவே அப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார் என்ற செய்திகள் வந்து கொண்டிருந்தன. அதை உறுதிப்படுத்தும் விதமாக தனது டுவிட்டர் தளத்திலிருந்து 'எகே 62' என்ற வார்த்தையையும், அஜித் புகைப்படத்தையும் நீக்கினார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்தை மகிழ்திருமேனி இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வரும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். விஜய்யின் 67வது படம் பற்றிய ஆரம்பக்கட்ட அப்டேட்டுகள் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தின. அது முடிந்த பின் அஜித் 62 பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என சொன்னார்கள்.
அதனால், இந்த வாரம் எகே 62 பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. விஜய்யின் 'லியோ' பட அறிவிப்பை அதிரடியான டீசருடன் ஆரம்பித்தார்கள். ஆனால், 'எகே 62' பற்றிய அறிவிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாமல் பத்திரிகைச் செய்தி அறிவிப்பாக மட்டுமே வெளியாகும் என்கிறார்கள்.