கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி | மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் | கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார் | தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை | 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின் | அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம் | தமிழில் இடைவெளி இல்லை: பிரியங்கா மோகன் | அம்மா மாதிரி வருவேன்: குஷ்பு மகள் நம்பிக்கை | 'ப்ரோ கோட்' டைட்டில் வழக்கை வாபஸ் பெற்றார் ரவி மோகன் | பிளாஷ்பேக்: தஞ்சை சிறையில் தயாரான படம் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் நேற்று மாலை 5 மணிக்கு யு-டியுபில் வெளியிடப்பட்டது.
தற்போது வரை இந்த டீசர் 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை படம் முடிந்த பின் வெளியாகும் டீசர், டிரைலர்கள் சாதனைகள்தான் கணக்கிடப்பட்டு வந்தது. இனி, டைட்டில் அறிவிப்பு டீசரின் சாதனையையும் கணக்கில் வைத்தாக வேண்டும்.
வெளியான 24 மணிநேரத்திற்குள்ளாக 15 மில்லியன் சாதனை என்பது அதிகம்தான். இன்று மாலைக்குள் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்தாலும் ஆச்சரியப்படுதவற்கில்லை. 'லியோ' டீசரில் என்னென்ன அம்சங்கள் மறைந்திருக்கிறது என்று 'டீகோட்' செய்து பார்ப்பதற்காகவே பலரும் அதைத் திரும்பத் திரும்பப் பார்த்து வருகிறார்கள்.
'கைதி, விக்ரம்' படங்களின் கதாபாத்திரங்கள் இந்த 'லியோ' படத்திலும் வருமா என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.




