அர்ஜுன், ஏ.ஜி.எஸ் நிறுவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | புருஷன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | கென் கருணாஸின் யூத் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது | 2026 ஜனவரியில் 22 படங்கள் ரிலீஸ் : 20 கோடி கூட லாபம் இல்லையா? | பாவனாவின் 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' பிப்ரவரி 6ல் ரிலீஸ் | பிரதீப் ரங்கநாதன் ஆக நினைக்கிறாரா அபிஷன் ஜீவிந்த் | 'ஜனநாயகன்' நிலை, இந்த வாரம் தெரிந்துவிடுமா? | ஹிந்தி பட இயக்குநர் வீட்டில் துப்பாக்கி சூடு : 5 பேர் கைது | இந்த வாரமும் 5 சிறிய படங்கள் ரிலீஸ் | சசிகுமாரின் 'மை லார்ட்' படம் பிப்ரவரி 13ல் ரிலீஸ் |

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தற்போது இயக்கி உள்ள படம் மைக்கேல். சந்தீப் கிஷன் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் திவ்யங்கா கௌஷிக் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிகில் ராயப்பன் என்ற ஒரு அதிரடியான வில்லனாக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இந்த மைக்கேல் படத்தில் வரலட்சுமி சரத்குமார், கவுதம் மேனன், அனுசியா பரத்வாஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த தமிழ் டிரைலரை நடிகர் ஜெயம் ரவி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளார்கள். அதிரடியான ஆக்சன் காட்சிகள் நிறைந்த இது டிரைலர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.