ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன் திரைக்கதை அமைத்தார். அதன் பிறகு தனுசை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை , மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களை இயக்கினார். இவற்றில் 11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவனும், தனுசும் இணைந்த நானே வருவேன் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படம் தோல்வி அடைந்து விட்டது. இதன் காரணமாக தற்போது சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் செல்வராகவன்.
இந்த நிலையில் வாத்தி படத்தை முடித்துவிட்டு கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதன்பிறகு சேகர் கம்முலா இயக்கும் மூன்று மொழிப்படத்தில் நடிப்பவர், அதன்பிறகு மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். அதன்பின் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க போகிறாராம். இப்படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் செல்வராகவன். இந்த படம் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.




