ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

'நேரம், பிரேமம்' படம் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “எனது வாழ்க்கையில் முதல் முறையாக சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தேன். அவரது வாயிலிருந்து சினிமாவுக்கான ஐந்தாறு கதைகளைக் கேட்டேன். பத்து நிமிடத்திற்குள் எனது புத்தகத்தில் அது பற்றிய சிறு குறிப்புகளை எழுதிக் கொண்டேன். அவர் ஒரு மாஸ்டர் என்பதால் அவரது அனுபவங்களைப் பகிர்ந்தார். ஆனால், ஒரு மாணவனாக அவர் சொல்வதில் ஏதாவது விட்டுவிடுவேனோ என பயந்தேன். நம்பமுடியாத இந்த கனவான சந்திப்புக்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.




