அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛2003ம் ஆண்டு வெங்கட் பிரபுவை வைத்து உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை நான் இயக்கியிருந்தேன். அப்போது அஜித் என்னை அழைத்து பாராட்டு தெரிவித்தார். என்னுடைய அம்மாவின் பேட்டியை இணையதளத்தில் பார்த்த அஜித்குமார், அவரிடத்தில் ஆசி பெற்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்குமார் எப்படி பழகினாரோ அப்படியே இப்போதும் பழகினார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. துணிவு படத்தில் நான் ஒரு இயக்குனர் என்பதை மறந்துவிட்டு வினோத் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன். இந்த படத்தில் நான் ஒரு இயக்குனரின் நடிகராக தான் இருந்தேன். என்னை இப்படத்தில் முழுமையாக மாற்றிவிட்டார் வினோத். அந்த வகையில் துணிவு படத்தில் நான் நடித்துள்ள போலீஸ் ரோல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.