20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு |

சமீபகாலமாக இந்திய படங்களுக்கு ரஷ்யாவில் அதிக சந்தை ஏற்பட்டுள்ளது. இங்கு தயாராகும் ஹீரோயிச படங்களை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள். குறிப்பாக பாலிவுட் படங்கள் அதிகமாக வெளியிடப்படுகிறது. கடைசியாக ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெரப் நடிப்பில் இந்தியில் வெளியான 'வார்' படம் தான் ரஷ்யாவில் வெளியான இந்திய படங்களில் அதிகபட்ச வசூலாக 1.7 கோடி ரூபிள் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' ஒரு மாதத்திற்கு முன்பாக ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. படம் இதுவரை 1.02 கோடி ரூபிளை வசூலித்துள்ளது. மேலும் 774 தியேட்டர்களில் திரையிடப்பட்ட இந்த படம் இதுவரை எந்த தியேட்டரில் இருந்தும் வெளியேறவில்லை. இன்னும் ஒரு சில நாட்களில் பாலிவுட் படமான வார் படத்தின் சாதனையை புஷ்பா முறியடிக்கும் என்கிறார்கள்.