சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | பெத்தி ரிலீஸ் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | பெத்தி : மகன் ராம்சரண் பற்றி பெருமைப்படும் அப்பா சிரஞ்சீவி | முதல்வர் விஜயை சந்தித்து பார்த்திபன் வைத்த கோரிக்கை | எஸ்.பி.பி பிறந்தநாள்: இளையராஜா, கமல் வாழ்த்து | கயாடு லோஹரை வியந்த மாரி செல்வராஜ்! | இயக்குனர் ஆக அறிமுகமாகும் ராகவா லாரன்ஸ் மகள்! |

அர்ஜென்டினா- பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. அந்த அணியைச் சேர்ந்த மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் அது குறித்து தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அந்த பதிவில், ‛‛சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்சியின் மூலமாக புதிதாக புரிந்து கொண்டேன். மெஸ்சி அர்ஜென்டைனாவுக்கு மட்டுமல்ல இந்த பிரபஞ்சத்திற்கே சொந்தமானவர். பந்திற்கும் அவரின் காலுக்கும் இடையே பெரும் புவியீர்ப்பு விசை இயங்குகிறது. ஷன நேரத்தில் நூறு முடிவுகளை அந்த மனிதரின் அசாத்திய மூளை எடுக்கிறது. மெஸ்சியின் ஒவ்வொரு அசைவிலும் இசை பிறக்கிறது. புருஸ்லீ, மைக்கேல் ஜாக்சன் போல மெஸ்சியும் நம் மனதுகளில் விளையாடுகிறார். வான்காவை போல் நெருடாவை போல, பீத்தோவனை போல் மெஸ்சியும் ஒரு மகா கலைஞன். அன்பு மெஸ்சியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன் - மிஷ்கின்'' என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.




