பிளாஷ்பேக்: சிவாஜி - சவுகார் ஜானகி இணைந்து நடித்த முதல் திரைக்காவியம் “படிக்காத மேதை” | திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா லாரன்ஸ்? ஜூன் 11ல் முக்கிய அறிவிப்பு | 'திரிஷ்யம்-3' ஹிந்தி பதிப்பு மாறுபட்ட கதை: அஜய் தேவ்கன் | கார்த்திக் ஆரியனுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை! - ராஷி கண்ணா வெளியிட்ட தகவல் | 'பெத்தி' படம் பார்க்க ஹைதராபாத் கிளம்பி வந்த ஜப்பானிய ரசிகைகள் | நடிகர் உன்னி முகுந்தன் புகாரின் பேரில் போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் அதிரடி கைது | சிரஞ்சீவி படத்தில் இணைந்த ரக்ஷிதா ராம் | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் பெத்லகேம் குடும்ப யூனிட் | பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு | பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீடு இந்த வாரம் டிசம்பர் 24ம் தேதி சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விழாவில் விஜய் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என்றும் உறுதியான தகவல் வந்துள்ளது. விஜய் நடித்து இதற்கு முன்பு இந்த வருடம் வெளிவந்த 'பீஸ்ட்' படத்திற்கு எந்த விழாவும் நடத்தப்படவில்லை. எனவே, 'வாரிசு' விழா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. யார் நம்பர் 1, பொங்கல் போட்டி, தெலுங்கில் எதிர்ப்பு என சில பல சர்ச்சைகளுக்குப் பின் இந்த வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால் விஜய்யின் பேச்சு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினர், அரசியல்வாதிகள் என பலரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
'வாரிசு' படத்திற்காக இந்த ஒரு விழாவில் மட்டும் கலந்து கொண்டுவிட்டு விஜய் தனது குடும்பத்துடன் லண்டன் செல்ல உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.