மீண்டும் கியாரா அத்வானியை இயக்குகிறாரா கீது மோகன்தாஸ்? | தமிழக அரசு திரைப்பட விருது பெற்ற சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், கீர்த்தி சுரேஷ் | சினிமாவை போன்று விளம்பரங்களிலும் சம்பாதிக்கும் தமன்னா | நானியின் ‛தி பாரடைஸ்' படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம் | சிக்கிரி சிக்கிரி பாடலுக்கு சொந்தமாக நடன அசைவை வெளிப்படுத்திய ராம்சரண் | துல்கர் சல்மானின் 41வது படத்தில் இணைந்த ஜெகபதிபாபு | மூத்த மகனும் டைரக்ஷனில் இறங்குகிறார் ; பிரித்விராஜின் அம்மா தகவல் | படப்பிடிப்பில் இருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய மிருணாள் தாக்கூர் | 24வது வருட காதலர் தினம் : ஜெனிலியாவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்த கணவர் | பிரேமம் ரீ ரிலீஸ் : முதல் வரவேற்பை இப்போதும் பெறுமா? |

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான படம் முப்தி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான ‛பத்து தல' படத்திலல் சிம்பு நாயகனாக நடித்து வருகிறார். சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் சிம்புவின் பிறந்தநாள் தினத்தில் வெளியானது. மேலும் இப்படம் டிசம்பர் 14ம் தேதி வெளியாக இருப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிகட்டப் பணிகள் இன்னும் முடிவடையாததால் இந்த படம் பிப்ரவரியில் திரைக்கு வரும் என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிப்ரவரி மாதத்தில் தனுஷின் வாத்தி உட்பட சில படங்கள் வெளியாவதால் பத்து தல படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.