‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்தனர் என்பதும் தமிழ் சினிமாவில் பிரிவில் முடிந்த ஒரு காதல் வரலாறு. ஹன்சிகாவின் தமிழ் சினிமா மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்குப் படங்கள் இல்லை.
இந்நிலையில் தனது பிசினஸ் பார்ட்னரும், தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவருமான சோஹைல் கத்துரியா என்பவரை வரும் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் மணக்க உள்ளார். திருமணத்திற்கு முன்னதாக தனது நெருங்கிய தோழிகளுக்கு 'பேச்சுலர்' பார்ட்டி ஒன்றை வழங்கியுள்ளார் ஹன்சிகா.
அது குறித்த வீடியோவை 'என்றென்றைக்கும் மிகச் சிறந்த பேச்சுலரேட்… சிறந்தவர்களின் வாழ்த்துகளுடன்,” என்று பதிவிட்டுள்ளார். தனது திருமணத்திற்கு தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யாரை ஹன்சிகா அழைத்துள்ளார் என்பது தெரியவில்லை. அவர்களை நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்து அழைத்ததாக எந்த தகவலுமில்லை. மீடியா முன்னிலையிலும் தனது திருமணம் குறித்து, மற்ற நடிகைகளைப் போல, அவர் எந்த பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தவில்லை.