காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் மீண்டும் வெற்றிகரமாக மறுபிரவேசம் செய்த ஜோதிகா, தொடர்ந்து தனக்கு தோதான சில கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றியை பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சித்தார் அந்த படத்தின் இயக்குனர் ஜியோ பேபி. ஆனால் சில காரணங்களால் அது கைகூடாமல் போய், அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் அதே இயக்குனர் தற்போது தான் மலையாளத்தில் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள 'காதல் : தி கோர்' என்கிற படத்தில் ஜோதிகாவை அழைத்துச் சென்ற கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த ஜோதிகா, ஒரேகட்டப் படப்பிடிப்பாக இந்த படத்தில் தனது காட்சிகளை முடித்து கொடுத்து நிறைவு செய்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் நாயகன் மம்முட்டி இந்த படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்து விடைபெற்றார். இந்த நிலையில் இன்று ஜோதிகாவும் காதல் படக்குழுவினரிடம் விடைபெற்று கிளம்பியுள்ளார்.




