
அர்ஜுன் மீது பதிலுக்கு குற்றம் சாட்டும் விஷ்வக் சென்
கேரளாவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க அர்ஜுன் உள்ளிட்ட படக்குழு தயாராக இருந்த போது அப்படப்பிடிப்பில் விஷ்வக் சென் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அர்ஜுன், விஷ்வக் சென் மீது குற்றம் சாட்டியிருந்தார். ஈடுபாடு இல்லாமல், தொழில் ரீதியாக நேர்மையாக இல்லாமல் இருக்கிறார் விஷ்வக் சென் என்பது அர்ஜுனின் குற்றச்சாட்டு.
நேற்று நடைபெற்ற "ராஜயோகம்" என்ற தெலுங்குப் பட விழாவில் அது குறித்து விஷ்வக் சென் பதிலளித்தார். “படத்தின் முதல் பாதிக்கான ஸ்கிரிப்ட் படப்பிடிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பே எனக்கு வந்தது. எனக்கான ஒரு இடத்தையும், சுதந்திரத்தையும், ஆலோசனைகளை ஏற்பதையும் மறுத்தார் அர்ஜுன். என்ன சொன்னாலும் என்னை சமாதானப்படுத்துவதிலேயே இருந்தார். படப்பிடிப்புக்குச் சென்றால் அது எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று செல்லவில்லை.
நான் படத்திலிருந்து விலகிவிட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், அர்ஜுன் சில விஷயங்களை விவாதிக்க வேண்டும். அது குறித்து அவரது குழுவிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. அதே சமயம் எனக்குத் தந்த சம்பளத்தைத் திருப்பிக் கேட்டார்கள். இது குறித்து நான் அமைதியாக இருக்கலாம் என்றுதான் இருந்தேன். இருப்பினும் என்னைப் பற்றி சர்ச்சை வந்ததால் இது குறித்து பேச வேண்டியதாகிவிட்டது. எனக்கு அர்ஜுனை அவமானப்படுத்தும் எண்ணமில்லை, படத்தின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே சொன்னேன்,” எனப் பேசியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!