தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் |

ஒரு சில மலையாள படங்களில் நடித்திருந்த நிலையில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் இவானா. இதில் அவர் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். படம் பெரிய வரவேற்பை பெறாததால் அவரும் வெளியில் தெரியாமல் போனார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் அவர் அறியப்படவில்லை.
இந்த நிலையில்தான் அவர் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கிறது லவ் டுடே படம். கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில் பிரதீப் ஜோடியாக இவானா நடித்துள்ளார். காதலனும், காதலியும் தங்கள் செல்போனை மாற்றிக் கொள்வதால் வரும் பிரச்சினைகைள சொல்லும் படம். இதில் இவானாவின் நடிப்பு பேசப்படுபவதாக அமைந்துள்ளது. படமும் இளைஞர்களிடைவே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
2012ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவானாவுக்கு 10 வருடங்களுக்கு பிறகுதான் ஒரு அடையாளமும், அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இதனால் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் கையில் இப்போது படங்கள் எதுவும் இல்லை. இனி வாய்ப்புகள் அதிகம் வரலாம்.




