'தாய் கிழவி'யைப் பார்க்க பெண்கள் வருவார்களா? | பிளாஷ்பேக்: ஆர் எம் வீரப்பனால் இயக்குநர் என்ற இலக்கை எட்டிப்பிடித்த ஏ ஜகந்நாதன் | 'கேஜிஎப் 2' டீசர் 279 மில்லியன் : 'டாக்சிக் டீசர் 100 மில்லியனாவது கடக்குமா ? | 8 வார ஓடிடி இடைவெளி; தெலுங்கு திரையுலகம் ஆலோசனை | ‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் |

பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை இயக்கினார். இந்தப் படம் ஹிந்தியில் வெளியான 'ஆர்ட்டிகள் 15' படத்தின் தமிழ் ரீமேக். கொரோனாவினால் அருண்ராஜாவின் மனைவி சிந்து மரணமடைந்தார். அதிலிருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது திருமணம் கடந்த 28ம் தேதி நடைபெற்றுள்ளதாம். திருமணம் பற்றிய அறிவிப்பை விரைவில் அருண்ராஜா வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.