
பைரவா பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்
இதுகுறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது தெரிகிறது.
மலையாளத்தில் "நான் நின்னோடு கூடேயுண்டு" என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா வினோத், அதைத்தொடர்ந்து கோகினூர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழில் பைரவா படத்தில் நடித்தார். பின்னர் கடந்த வருடம் தமிழில் வெளியான நடுவண் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!