இந்தாண்டு ஹிட் படமெல்லாம்... முதல் படத்தில் ஜெயித்த இயக்குனர்கள் | ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா? | 10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் | மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த் | 'கடல் கன்னி' ஆண்ட்ரியா | சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? |

தமிழ் சினிமாவின் முன்னணி கலை இயக்குனர்களில் ஒருவர் கிரண். தயாரிப்பு வடிவமைப்போடு, நடிகராகவும் இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களில் கிரணும் ஒருவர். நேற்று அவருடைய டுவிட்டரில் 1989ம் ஆண்டில் அவர் இளம் ரஜினி ரசிகராக இருந்த போது எடுத்த ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, “1989ல் தலைவர் ரஜினிகாந்த் சாருடன்…. பல வருடங்களுக்குப் பிறகு எனது நீண்ட நாள் கனவு நேற்று மாலை நிறைவேறியது. எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம், நன்றி சார்…எனது அன்புக்குரிய நெல்சன் டார்லிங், உன்னால் மட்டுமே இது நடந்தது…ஜெயிலர்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, “மிகச் சிறந்த தருணம், பல வருட கனவு, நீங்கள் ரொம்ப இனிமையானவர் சார், கடந்த இரண்டு நாட்களாக உங்கள் குரலைக் கேட்கிறேன், 'சோ ஸ்வீட்', எனது அன்புக்குரிய நெல்சன் டார்லிங், மீண்டும் நன்றி,” என தான் இன்னமும் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை உணர்த்தும் விதமாகப் பதிவிட்டுள்ளார்.
ரஜினியின் ரசிகர்கள் கிரணின் பதிவுக்கு லைக்குகளைக் குவித்து வருகிறார்கள்.




