ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

டாக்டர், டான் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பிரின்ஸ். தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படத்தை அனுதீப் இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ், யோகி பாபு உட்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பிரின்ஸ் படத்திற்கு தணிக்கை குழு, ‛யு' சான்றிதழ் அளித்திருப்பதாகவும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரின்ஸ் படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அதேபோல் கார்த்தி நடித்து அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வரும் சர்தார் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.




